skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

Comments

விகடனில் நான்...

Facebook Badge

ஃபாலோ மீ...

'Sweet' Messaging Service

பழைய சோறு

  • ▼  2006 (1)
    • ▼  October (1)
      • கம்யூனிகேஷன் கேப் - IIஏற்கனவே கம்யூனிக்கேஷன் கேப்(...
  • ►  2004 (1)
    • ►  July (1)

விலைவாசி...

Add-Tamil

Hit / Flop?

Subscribe To

Posts
    Atom
Posts
All Comments
    Atom
All Comments

ச்சும்மா...டெஸ்டிங்...

Tuesday, October 17, 2006

Buzz It

கம்யூனிகேஷன் கேப் - II

ஏற்கனவே கம்யூனிக்கேஷன் கேப்(மாரி) படிச்சிருப்பீங்க. இது அடுத்த வெளியீடு.

நேற்று ஊரிலிருந்து ஒரு நண்பன் வரான்னு சத்யம்-ல "சில்லுனு ஒரு காதல்" இரவு காட்சி போகனாம்னு டிக்கெட் வாங்க சென்றேன். அவன் கோவை எக்ஸ்பிரஸ்ல் வந்து கொண்டிருந்தான். அவனை 9:15-க்கு மத்திய இரயில் நிலையம் சென்று அழைத்து வரவேண்டும். சத்யம்-ல் படம் ஆரம்பிக்கும் அரை மணி நேரம் முன்பு பயங்கர கூட்டம் இருக்கும். அதனால் முதலில் டிக்கெட் வாங்கிக் கொண்டு பின் இரவு உணவை திருவல்லிக்கேணி அம்பாள் மெஸ்ல் முடிக்கலாமென்று சுமார் 8 மணியளவில் திரைஅரங்கம் சென்றிருந்தேன்.

நான் பெரும்பாலும் அரங்கத்தின் நடுவில் அமர்ந்து படம் பார்ப்பதை விரும்புவேன் (பின்னாலிருந்து ஒரு 5-6 வரிசை முன், E-F வரிசை). இரண்டு ப்ரீமியம் டிக்கெட் சொன்னேன். ப்ரீமியம் என்பது A - I வரிசை வரை. J-ல் இருந்து எகானமி. "எந்த வரிசை இருக்கிறது?" என்று கேட்டேன். டிக்கெட் கொடுப்பவர் "A, B-ல் இருந்து இருக்கிறது" என்றார். "எனக்கு E அல்லது F வரிசை இருக்குமா?" என்றேன். அப்பொழுது டிக்கெட் கொடுப்பவர் கொஞ்சம் போல் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு "இருக்கு" என்றார். 'என்னடா இது ஒரு ஐந்து ஆறு வரிசை முன் உட்காருவதால் என்ன' என்று நினைத்துக் கொண்டேன். பின் டிக்கெட் கொடுத்தார். பணம் கொடுத்தவுடன் "ஹேவ் எ நைஸ் ஷோ, சார்" என்றார். நானும் "தேங்க்ஸ்" சொல்லி வந்துவிட்டேன்.

பின் இரவு உணவு முடிந்து, நண்பனை பிக் அப் செய்து தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். இடைவேளை முடிந்து கொஞ்ச நேரத்தில் ஒரு பாடல் வந்தது. அந்த பாடல் சுமாராகவே இருந்தது. வேறு ஏதோ யோசித்துக் கொண்டிருந்த பொழுது, அரங்கத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை என்று உணர்ந்தேன். A, B வரிசையில் கொஞ்சம் போல கூட்டம். J, K-ல் கொஞ்சம் கூட்டம். நாங்கள் உட்கார்ந்திருந்த வரிசையில் முன்னும் பின்னும் ஆள் இல்லை. என் வரிசையில் நாங்கள் இருவர் தான். அப்பொழுது தான் அந்த டிக்கெட் கொடுத்தவன் ஏன் சிரித்தான் என்று உரைத்தது.

அடங்கொக்கமக்கா...நான் ஏதோ ஃபிகர தள்ளிட்டு வரேன்னு நினைச்சானா?


Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

Posted by சீனு at 12:50 PM 0 comments

Wednesday, July 14, 2004

The Bicycle Thief (1948)

Buzz It

ஊருக்கு ரயிலில் சென்று வரும்பொழுது ரயிலில் விற்கப்படும் டி.வி.டி-க்களை பொழுதுபோக்கிற்காக வாங்குவேன். பெரும்பாலும் புதிய படங்கள் தான் என்றாலும், ஒரு முறை சில பழைய ஆங்கில B/W படங்களையும் பார்த்தேன். அந்தப் படங்களின் பெயர்கள் பள்ளிக்கூட நாட்களில் கேட்டமாதிரி இருந்ததாலும் (The Bicycle Thief, My Fair Lady மற்றும் The Sound Of Music ஆகியன), பழைய படங்களின் டி.வி.டி-க்கள் விற்கப்படுகிறதே என்ற ஆச்சரியத்திலும் அதை வாங்கினேன். அதில் ஒன்று தான் இந்த "The Bicycle Thief" படம். 1949-ல் வந்தது. ["LADRI DI BICICLETTE"]கடைசி வரை அது ஃபிரஞ்சு/இத்தாலி/துருக்கி/ரோமானிய மொழியா என்று தெரியவில்லை. ஆனால், கதை ரோம்-ல் நடப்பதாக ஒரு வசனத்தில் வருவதால் அது ரோமானிய மொழியாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். (கடைசியில் அது இத்தாலிய மொழி திரைப்படமாம். (Google இட்டேன்). இந்தக் கதையை சுட்டு தான் தமிழில் சிவாஜியின் இரண்டாவது(?) படமான "முதல் தேதி" செய்தார்களா என்று தெரியவில்லை. "முதல் தேதி"? அதாங்க என்.எஸ்.கே பாடுவாரே "ஒன்னுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்"-ன்னு. அது.


நம்ம ஊர் 60-களில் எப்படி இருந்திருக்குமோ, அதே நிலையில் தான் கதைக்களமும். ரோம் நகரம். வேலை கிடைக்காத நாட்கள். குழுமியிருக்கும் 30 பேர்களில் 2 பேருக்கு வேலை என்று அறிவிக்கும் முதல் காட்சியே வேலை இல்லா திண்டாட்டத்தை சொல்லிவிடுகிறது. அதில் கதாநாயகன் ரிஸ்ஸி அன்டோனியோ (Antonio Ricci)-விற்கும் கிடைக்கிறது. சுவரொட்டிக்களை ஒட்டும் வேலை. மாதம் 6000+ Lire(லிரா) சம்பளம். ஆனால் கட்டாயம் சைக்கிள் வேண்டும்.


மனைவி மரியா ரிஸ்ஸி (Maria Ricci)-யிடம் இதை சொல்ல, அவளோ தன் வரதட்சணையில் வந்த ஆறு படுக்கை விரிப்புகளை (யாருப்பா ஆறு போட கூப்பிட்டது?), நான்கு உபயோகித்தது, இரண்டு உபயோகப்படுத்தாதது என்று, 7500 லிரா-களுக்கு அடகு வைத்து, வட்டியுடன் 6500 லிரா-களை கொடுத்து சைக்கிளை மீட்டு தருகிறாள்.


மறுநாள் அன்டோனியோவும் அவன் பையன், புரூனோ (Bruno)-வும் வேலைக்கு போகின்றனர். புரூனோ ஒரு பெட்ரோல் பங்க்-ல் வேலை பார்க்கிறான். முதல் நாள் வேலை. மாலை ஏழு மணிக்கு வந்து கூட்டிச்செல்வதாக மகனிடம் சொல்லி செல்கிறான். சக ஊழியர் போஸ்டர் ஒட்டுவது எப்படியென்று செய்து காண்பித்து (demo class), செல்ல மும்முரமாக போஸ்டர் ஒட்ட ஆரம்பிக்க ஒரு திருடன் சைக்கிளை திருடிக் கொண்டு ஓடுகிறான். இவனும் துரத்திச் செல்ல, கண்டுபிடிக்க முடியவில்லை. திருடன் ஓடிவிடுகின்றான். (நம்ம ஊர் போல இருக்கும்) காவல்துறையில் புகார் கொடுக்கிறான். (போலீஸ்காரர் சக போலீஸ்காரரிடம் "Nothing! Just a Bicycle"). பேருந்தில் எழரைக்கு திரும்பி வந்து(!) மகனை கூட்டிச் செல்கிறான். வீட்டிற்கு செல்ல மனமில்லாமல், நண்பனைப் பார்த்து தன் கதையை சொல்கிறான். அவர்கள் மறுநாள் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்கும் இடத்துக்கு கூட்டிச் செல்வதாகவும், அங்கே தான் திருட்டுப் போன சைக்கிள்கள் கிடைக்கும், நம்ம சென்னை புதுப்பேட்டை மாதிரி, என்று சொல்கிறார்கள்.


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சைக்கிள் parts-களை தேட அறிவுறுத்தப்பட்டு, தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. மதியம் ஆகிறது. நண்பர்கள் திரும்பிக் கொள்ள, இவனுக்கோ சைக்கிளை தேட வேண்டிய கட்டாயம். மகனுடன் சேர்ந்து தேடுகிறான். அப்பொழுது பார்த்து மழை. ஒரு கட்டிடத்திற்கு கீழே ஒதுங்குகிறான். அங்கே சற்று தூரத்தில் அவன் சைக்கிளில் ஒரு பிச்சைக்காரனிடம் வந்து கணக்கு செட்டில் செய்யும் ஒருவனைப் பார்க்கிறான். அவனைத் துரத்த, மீண்டும் தப்பிக்கிறான். அந்தக் பிச்சைக்காரனை ஒரு தேவாலயத்தில் நடக்கும் மாஸ்-ல் கண்டுபிடிக்கிறான். அவன் எதுவும் கூற மறுக்க, இவன் சற்றே அங்கேயே சண்டைப் போடுகிறான். பிச்சைக்காரனும் அந்த களேபரத்தில் தப்பிக்கிறான்.


பையனுக்கோ உச்சா அவசரம். அனால் போகக்கூட நேரமில்லை. காரணம் திருடனைப் பிடிப்பதே வேலையாகிப் போனதால். பையன் சோர்வடைந்ததைப் பார்த்து, விரக்தி அடைந்து, இனி கவலைப்பட்டு பிரயோசனமில்லை என்று, அவனை ஒரு நல்ல உணவகத்துக்கு கூட்டிச் செல்கிறான். "Why should I kill myself worrying when I'll end up just as dead?". ஃபுல் பாட்டில் வைனும், இரண்டு Mozzrellaas-ம் ("வைனுடன் அம்மா நம்மை பார்த்தார்கள் அவ்வளவுதான். நாம ஆம்பளைங்கதானே. பரவாயில்லை") சாப்பிடுகிறார்கள். அங்கே கணக்கு வேறு. "12000 + 2000 ஓவர்டைம் + Family Ammowance (800/day). இவ்வளவையும் ஒரு நாளில் இழக்க வேண்டுமா? தேடுவோம். வேறு வழியில்லை. அந்த குறி சொல்பவளிடமே செல்வோம்" என்று தேடுகிறார்கள் (சைக்கிளை அடகு கடையில் இருந்து மீடு வரும் வழியில், 50 லிரா-கள் கொடுத்து மரியோ அந்தக் குறி சொல்பவளிடம் சென்று கேட்பதை கிண்டலடித்தான்). குறி சொல்பவளோ, "இன்று கிடைத்தால் தான் ஆச்சு. இல்லையேல் இனி கிடைக்காது" என்று சொல்கிறாள்.


வெளியே வரும்பொழுது வழியில் அந்தத் திருடனை பார்க்கிறார்கள். அவனை துரத்திச் சென்று, (அவன் ஏரியாவில்) பிடித்து கேட்க, அவனோ போலீசிடம் தான் நிரபராதி என்று கூறுகிறான். போலீசும் அவன் வீட்டில் சோதனை செய்து பார்க்கிறார்கள்.


சரி இனி வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி, அங்கே ஒரு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நடக்கிறது. சைக்கிள் நிறுத்துமிடத்தைப் பார்க்கிறான். அதற்கு ஒரு காவலாளி. அதை விடுத்து சற்று தூரத்தில் ஒரு வீட்டின் வாசலில் தனியாக இருக்கும் ஒரு சைக்கிளைப் பார்க்கிறான். ஒரு முடிவு செய்தவனாய், பையனிடம் பணம் கொடுத்து அவனை பேருந்து பிடித்து வீட்டிற்கு செல்லுமாறும், தான் வந்து விடுவதாகவும் கூறுகிறான். பையன் பேருந்து அருகில் செல்ல பேருந்து நகர்ந்து விடுகிறது. தந்தையை நோக்கி வருகிறான். தந்தையோ நேரம் பார்த்து, விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விட்டு சைக்கிள் எடுக்க வரும் கூட்டத்துடனே சேர்ந்து விடலாம் என்று அந்தத் தனியாக நிற்கும் சைக்கிளை திருடி ஓடுகிறான். இவையாவையும் அந்ததப்பையனும் பார்க்கிறான். சைக்கிள் சொந்தக்காரன் கத்த, (அப்பொழுது மட்டும்) அவனைப் பிடித்து விடுகிறார்கள். அவமானம். கண்ணத்தில் சில் அடிகள் விழுகின்றது. தந்தை அடி வாங்குவதைப் பார்த்து அவரிடம் வருகிறான். போலீசும் வந்துவிடுகின்றது. அவனை இழுத்து செல்கிறார்கள். கீழே விழுந்த தொப்பியில் இருந்த தூசியைத் தட்டி எடுத்து வருகிறான் பையன். சைக்கிள் சொந்தக்காரனோ, அவனுக்கு ஒரு பையன் இருப்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு, புகார் கொடுக்காமல் அவனை விட்டுவிட சொல்லுகிறான். "I don't want to bother. The man has enough trouble" என்று க்கூறி அண்டோனியோ பக்கம் திரும்பி "A fine example you set for your son". அனைவரும் கலைந்து செல்கிறார்கள்.


பையன் தொப்பியை கொடுக்க, கண்ணீர், அவமானம், வெட்கம் எல்லாம் சேர்ந்து கொண்டு, (பையன் தந்தையைப் பார்க்க, விசும்பலுடம்) வீடு நோக்கி நடப்பதாக படம் முடிகிறது.


இதை எழுதும் பொழுது கூட அந்தக் கதையின் தாக்கம் எனக்கு கண்ணிரை வரவழைத்தது. படத்தில் குறிப்பிட வேண்டிய அம்சம், அண்டோனியோ மற்றும், முக்கியமாக, அந்தப் பையன் புரூனோ. அருமையான நடிப்பு. வேலைக்கு செல்லும் பொழுது கைக்குழந்தையான தங்கையை பாதிக்கும் என்று வீட்டு சன்னலை மூடும் இடம், சாப்பிடும் இடத்தில் அருகில் இருக்கும் இருக்கும் மற்றொரு பணக்கார பையன் சாப்பிடும் Mozzrellaas-க்களை ஏக்கத்துடன் பார்ப்பதும், தன்னை மற்றவர்கள் நசுக்கி இடிப்பதைகூட பார்க்காமல் சைக்கிள் நியாபகத்திலேயே இருக்கும் தந்தையை பரிதாபமாக பார்க்கும் இடம், தந்தை கணக்கு சொல்ல சொல்ல எழுதிவிட்டு "We will find it" என்று சொல்லும் இடம், தந்தையை மற்றவர்கள் அடிக்கும் இடத்தில் வெறும் கண்ணீரை மட்டுமே விட்டு மற்றவர்களின் பரிதாபத்தை சம்பாதித்து, இப்படி பல இடங்கள் நம் நெஞ்சை உருக்கிவிடுகின்றான். அண்டோனியோ. ஒன்றும் செய்ய முடியாமல் கையாலாகாதத்தனத்தை வெளிப்படுத்தி, பையனை பார்க்க முடியாமல் கண்ணீர் விட்டு...அருமையான பாத்திர படைப்பு.


Antonio Ricci - Lamberto Maggiorani
Bruno - Enzo Staiola
Maria - Lianella Carell
Begger - Carlo Jachino
Directed by Vittorio DeSi


Wikipedia-வில்


Quotes from the film


Antonio Ricci: "You live and you suffer."
Antonio Ricci: "Why should I kill myself worrying when I'll end up just as dead?"
Antonio Ricci: "There's a cure for everything except death."


சான்ஸ் கிடைத்தால் நிச்சயம் பாருங்களேன்.


Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Share/Save/Bookmark

The Bicycle Thief (1948)

Posted by சீனு at 9:57 PM 8 comments
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Indli - India News, Cinema, Cricket, Lifestyle
Tamilish NewsPaanai.com Tamil News Sharing Site Thiratti.com Tamil Blog Aggregator
Subscribe to: Posts (Atom)

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்